2025 மே 08, வியாழக்கிழமை

‘முன்னாயத்தம் மேற்கொள்வோம்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலத்துக்கு காலம் அவ்வப்போது சுழற்சியாக இடம்பெறும் இயற்கை, செயற்கை இடர், அழிவு நாச வேலைகள் என்பனவற்றுக்காக  நிவாரணம் வழங்குவது மாத்திரம் அரசாங்கத்தின் பணியாக இருக்கக் கூடாது எனத் தான் வேண்டுகோள் விடுப்பதாக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

சமீபத்திய சீரற்ற வானிலை, மழை, வெள்ளம் தொடர்பாக மக்கள் நிர்க்கதிக்குள்ளாகியிருப்பது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுக்காட்டியுள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில்,  “பாதிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் நிவாரணம் வழங்கும் கலாசாரத்தையும், மக்கள்  நிவாரணங்களைப் பெற முண்டியடிக்கும் கலாசாரத்தையும் மாற்றியமைக்க வேண்டும்.

“அழிவுகள் இடம்பெறுவதற்கு முன்னர் அவதானமாக இருந்து, அந்த அழிவுகளை முன்னாயத்தமாக முறியடிக்கும் யுக்தித் திட்டமிடல் அனைத்துத் தரப்பிலும் இருக்க வேண்டும்.

“துரதிர்ஷ்டவசமாக முன்னாயத்தம், முன்னெச்சரிக்கை, தற்காப்பு என்பன போன்ற விடயங்களில் இன்னமும் மக்கள் தயார்படுத்தப்படாத நிலையில் உள்ளார்கள். அதேபோன்று, அரசாங்கத்திடமும் இத்தகைய யுக்தித் திட்டமிடல்கள் இல்லை.

“இதனால் அரசாங்கம் இழப்பீடுகள் வழங்குவதன் மூலம், ந‪ஷ்டத்தையும் மக்கள் தமது சொத்துகளை, உடமைகளை, உயிர்களை அழியக் கொடுப்பதன் மூலம்  இன்னல்களையும் எதிர்கொள்கின்றார்கள்.

“அறிவுப் புலத்தில் நாம் பின்தங்கியிருக்கின்றோம் என்பதற்கு நாம் முன்னேற்பாடில்லாமல் எதிர்கொள்ளும் அழிவுகளே ஆதாரமாக அமைந்திருக்கின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X