2025 மே 07, புதன்கிழமை

முன்னாள் எ.பிக்கள் கௌரவிப்பு

கே.எல்.ரி.யுதாஜித்   / 2020 மார்ச் 08 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புளியந்தீவு புனித மரியாள் தேவாலயத்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு, அருட்தந்தை சீ.வி.அண்ணதாஸின் ஏற்பாட்டில், தேவாலயத்தில் இன்று (08) நடைபெற்றது.

கடந்த ஆட்சியின் கம்பெரலியத் திட்டத்தினூடாக நிதியொதுக்கீடுகளை மேற்கொண்டு, தேவாலயத்தின் அபிவிருத்திப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காகவே, இவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் அந்தோனி கிருரஜனின் வேண்டுகோளின் அடிப்படையில், த.தே.கூவின் எம்.பிகளான ஞா.சிறிநேசன், தேவாலய மேற்கூரைத் திருத்தத்துக்காக ரூபாய் 01 மில்லியனும், சீ.யோகேஸ்வரன் தேவாலயத்தின் மதில் பூச்சுக்காக ரூபாய் 0.3 மில்லியனும் ஒதுக்கீடுகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்தக் கௌரவிப்பு நிகழ்வில், புளியந்தீவு புனித மரியாள் தேவாலயத்தின் உதவிப் பங்குத்தந்தை ஜுட் குயின்டஸ், அருட் சகோதரர் ஸ்டீபன், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X