Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஓகஸ்ட் 22 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஸ்லிம்கள் ஆயுதம் வைத்திருக்கின்றனர் எனவும், அவ்விடயத்தில் தனக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் தொடர்பு இருக்கிறது எனவும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பில், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளிடம் தீவிர விசாரணை நடத்தவேண்டும் என்று, நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, நேற்று (21) அவர் விடுத்த அறிக்கையில், இவ்வாறான குற்றச்சாட்டுகள் மூலம், முஸ்லிம் சமூகத்தை பிரச்சினைக்குள் சிக்கவைக்க வேண்டும் என்பதே, தீவிரவாத - கடும்போக்குவாத அமைப்புகளின் நோக்கமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான விடயத்தை, உரிய விசாரணைகள் மூலமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் இவ்வாறான கற்பனைகள் எதிர்காலத்திலும் சிலருக்கு ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில், அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும், சட்டமும் ஒழுங்கும் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு என்பன, இந்த விடயம் தொடர்பில் கரிசனையோடுள்ளன என்றும் தெரிவித்த அவர், எனவே, இது தொடர்பில், உரிய விசாரணை நடத்தவுள்ளதாக, சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார் என்றும், அவர் மேலும் குறிப்பிட்டார்
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago