Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன், பழுலுல்லாஹ் பர்ஹான்
முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்று வந்த வன்முறைச் சம்பவங்களை, நல்லாட்சி அரசாங்கம் பெரும்பாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது” என, புனர்வாழ்வளிப்பு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடி, முதலாம் குறிச்சியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸாவியா பள்ளிவாசலின் புதிய கட்டடத்தை, நேற்றுக் காலை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
காத்தான்குடி, முதலாம் குறிச்சி, மீரா ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், தொடர்ந்தும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்,
“யுத்தம் நிலவிய காலப்பகுதியில், வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் நிம்மதியிழந்து, அச்சத்துடன் வாழ்ந்து வந்தோம். ஆனால் இன்று, வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழ்கின்ற முஸ்லிம்கள், அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
“முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் முஸ்லிம்களின் புனித பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து, ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டங்கள் மற்றும் மத்திய குழுக் கூட்டங்களில் நான் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளேன்.
“முஸ்லிம்களைப் பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட இந்த அரசாங்கத்துக்கு உண்டு என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளேன்.
“கடந்த ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நான் ஆதரிக்காவிட்டாலும், இந்த நாட்லுள்ள 95 சதவீதமான முஸ்லிம்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க வேண்டுமென ஆதரித்தனர்.
“அதன் அடிப்படையில்தான் நாங்களும், ஒட்டு மொத்த ஆதரவை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நல்லாட்சி அரசாங்கத்துக்கும் இன்று வழங்கி வருகின்றோம்.
“சம்பந்தப்பட்ட மத குருக்களுடன் பிரச்சினைகள் இருந்தால், ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில், அவர்களை மாதாந்தம் கூட்டங்களுக்கு அழைத்துப் பேசித் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
“இந்த அரசாங்கத்தில் யாராவது ஊழல் செய்தால், தயவு தாட்சணையின்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
“இதற்கமைய, 6 வருடங்களுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கத்தை யாராலும் அசைக்க முடியாது. நினைத்த மாதிரியெல்லாம் அரசாங்கத்தையோ ஜனாதிபதியையோ மாற்ற முடியாது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
23 May 2025