2025 மே 21, புதன்கிழமை

முஸ்லிம் எயிட் நிறுவனத்தால் சைக்கிள்கள் வழங்கி வைப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஒக்டோபர் 31 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தொழிற் பயிற்சி அதிகார சபையின் கீழ் இயங்கும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில்நுட்பக் கல்வி பெறும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் பயிலுநர்கள் 41 பேருக்கு, முஸ்லிம் எயிட் நிறுவனத்தால் இன்று (31) சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டதாக, அதன் மட்டக்களப்பு மாவட்ட நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் ஏ.ஜி.எம். பஹீ தெரிவித்தார்.

வாழைச்சேனை, கிரான், காத்தான்குடி ஆகிய பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வறுமை நிலையிலுள்ள இந்தப் பயிலுநர்களின் வாழ்வாதார மற்றும் தொழிற் கல்வி பெறுவதற்கான போக்குவரத்து வசதியை இலகுபடுத்தும் நோக்கில், இந்த உதவிகள் அளிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கைத் தொழில்நுட்ப அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.பி.எம். நழீம், பிரதேச செயலாளர்களான எஸ்.எச். முஸம்மில், கே. தனபாலசுந்தரம், வன்னியசிங்கம்  வாசுதேவன், முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் எம்.ரீ.எம். பஸ்லான் அதன் மட்டக்களப்பு மாவட்ட நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் ஏ.ஜி.எம். பஹீ உட்பட பயனாளிகளான தொழிற் பயிற்சிப் பயிலுநர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X