2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மூன்று திட்டங்கள் அங்குரார்ப்பணம்

Editorial   / 2018 ஜூலை 05 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி விழுரியா வித்தியாலயத்தின் மாணவர்களின் நலன் கருதி, அங்கு பெளதீக வளங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், பாடசாலைக் கட்டடத்துக்கு வர்ணம் பூசுதல், வகுப்பறைகள் சீரமைப்பு, நவீன குடிநீர்த் திட்டம் ஆகிய 3 திட்டங்கள், 10 இலட்சம் ரூபாய் செலவில் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.

பாடசாலை அதிபர் எ.எல்.எம் அறபாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், காத்தான்குடி நகர முதல்வர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம் அஸ்பர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

FORUMS அமைப்பின் பணிப்பாளர் அல்ஹாஜ் எஸ்.எல்.எம் ஆரிப், டொக்டர் எம்.ஆர்.எ ஷிப்லி, எச்.எம்.எம் நஸ்லீம் (Air Ticketing Agency), எம்.ஐ.எம் நளீம் (Basheer Tex) ஆகியோர்களின் நிதிப்பங்களிப்புடன் இத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஏ.எல்.டீன் பைரூஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X