Freelancer / 2023 நவம்பர் 07 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம் எஸ் எம் நூர்தீன்
மட்டக்களப்பு மேய்ச்சல் தரை மயிலத்தமடு மாதவனை பகுதியில் பொலிஸ் சோதனைசாவடியொன்று அமைக்கப்பட்டுள்ளது
இந்த பொலிஸ் சோதனைசாவடியை மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரால் ஞாயிற்றுக்கிழமை (05) திறக்கப்பட்டு கடமைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேய்ச்சல் தரை பகுதியில் பொலிஸ் காவல் அரண் ஒன்று அமைக்குமாறு மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தில் பண்ணையாளர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய மேற்படி சோதனைசாவடி அமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது
கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் பிரிவாக இந்த புதிய பொலிஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது
மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இங்கு சென்று பார்வையிட்டு பொலிஸாரை கடமைக்கு அமர்த்தி கடமைகளை ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. M
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .