Freelancer / 2021 ஜூன் 16 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் நேற்று (15) ஒரு இளவயது குடும்பஸ்தர் உட்பட மூன்று பெண்கள் அடங்களாக 6 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ஏறாவூரில் இரண்டு பெண்களும் ஒரு ஆணும், காத்தான்குடியில் 27 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரும் ஒரு பெண்ணும், களுவாஞ்சிகுடியில் ஒரு ஆணுமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இளம் குடும்பஸ்த்தர் திருமணம் முடித்து மூன்று மாதங்கள் என தெரிய வருகின்றது.
இதே வேளை நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில், 165 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தகப்பட்டுள்ளது..
மேலும் கோரளைப்பற்று மத்தி 56பேருக்கும், மட்டக்களப்பு நகர் 24 பேருக்கும், களுவாஞ்சிக்குடி 32 பேருக்கும், வாழைச்சேனை 06பேருக்கும், காத்தான்குடி 23 பேருக்கும், ஓட்டமாவடி 05 பேருக்கும், ஏறாவூர் 10 பேருக்கும், வவுணதீவு 04 பேருக்கும், வெல்லாவெளி 02 பேருக்கும், ஆரையம்பதி 01 பேருக்கும், மட்டக்களப்பு சிறைச்சாலை 02 பேருக்கும் தொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
M
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago