2025 மே 08, வியாழக்கிழமை

மைதானத்தில் நாச வேலை

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 22 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

வாழைச்சேனை பகுதியில் இயங்கி வரும் அஸ்பக் அகடமியின் விளையாட்டு மைதான சுற்றுமதில் மேல் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பந்து தடுப்பு சீலை, இனந்தெரியாத நபர்களால் நேற்று (21) தீ வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விளையாட்டு மைதானத்தில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் போது பந்து சுற்று மதிலை தாண்டி வெளியில் செல்லாமல் தடுப்பதற்காக வேண்டி கடின சீலை பொருத்தப்பட்டிருந்தது.  

அவ்வாறு பொருத்தப்பட்டிருந்த சீலைக்கு தீ வைக்கப்பட்டு அது முற்றாக எரிந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X