Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மார்ச் 28 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மாங்கேணியில் ஆரம்பிக்கப்படவுள்ள 'நண்டு நகரத் திட்டம்' தொடர்பான முன்மொழிவில் முதலீட்டாளர்களுக்கும் வேலைவாய்ப்பில்; வாகரைப் பிரதேசத்தில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என கிராமிய பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
வாகரைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோரின் இணைத் தலைமையில் அப்பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (28) நடைபெற்றது.
இத்திட்டம் தொடர்பில் அங்கு ஆராயப்பட்டபோது இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், 'இத்திட்டத்தை முன்னெடுக்கும்போது முதலீட்டாளர்களுக்கும் வேலைவாய்ப்பு விடயத்தில் வாகரைப் பிரதேசத்துக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.
இதனை அடுத்து, மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனவும் அவர் கூறினார்.
வாகரைப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட மாங்கேணியில் 200 ஏக்கரில் 'நண்டு நகரத் திட்டம்' ஆரம்பிப்பது தொடர்பாக நெக்டா நிறுவனம் முன்மொழிவை வைத்தது.
இத்திட்டம் சுற்றுச்சூழல் மாசடையாத வகையில் முன்னெடுக்கப்படும் என்பதுடன், ஏக்கர் ஒன்றுக்கு 10 மில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும் எனவும் அதன் முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்டு வளர்ப்பை மேற்கொண்டு வெளிநாடுகளுக்கு நண்டுகளை ஏற்றுமதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும் என்பதுடன், இத்திட்டம் எதிர்வரும் 2018ஆம் ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவூட்டப்பட்டு கருத்துகள் பெறப்பட வேண்டும் எனவும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 minute ago
12 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
12 minute ago
2 hours ago