2025 மே 08, வியாழக்கிழமை

மாட்டு வண்டி செலுத்துனர் விபத்தில் பலி

Gavitha   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா, எம்.சி.அன்சார், அஸ்லம் மௌலானா, பைஷல் இஸ்மாயில், யூ.எல். மப்றூக்

அம்பாறை, சம்மாந்துறை வங்களவடி பிரதேசத்தில், மாட்டு வண்டியொன்றை லொறியொன்று மோதியதில், மாட்டு வண்டியைச் செலுத்தி வந்தவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி, லொறியை அவ்விடத்திலேயே விட்டு விட்டு, தப்பிச் சென்றுள்ளதாகவும் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக சம்மாந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்மாந்துறை விளினியடியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான, ஆதம்பாவா தங்கராசா (வயது 53) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X