Thipaan / 2015 டிசெம்பர் 26 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் உறுப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்குமிடையிலான கலந்துரையாடல், காத்தான்குடியில் சம்மேளன அலுவலக மண்டபத்தில் வியாழக்கிழமை(24) இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் போது, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகளான தாதியர், வைத்தியர்கள், காவலாளிகள், இரத்த வங்கி போன்ற இன்னும் பல குறைபாடுகளை சம்மேளன உறுப்பினர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் சுட்டி காட்டி இதற்கான தீர்வினை பெற்றுத்தருமாறு கேட்டு கொண்டனர்.
ஒட்டுமொத்த பிரச்சனைகளையும் நான் கருத்தில் கொண்டுள்ளேன் எனக் கூறிய முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், வெறுமனே சொல்லில் இல்லாது அனைத்து பிரச்சனைக்குமான தீர்வுகளையும் எனது ஆட்சிக்காலத்துக்குள் பல்வேறு நடவடிக்கை மூலமாகவும் தீர்வினை பெற்று தருவேன் என கூறினார்.


4 minute ago
11 minute ago
14 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
11 minute ago
14 minute ago
18 minute ago