2025 மே 10, சனிக்கிழமை

முதலையிடம் சிக்கிய மீனவர்

Niroshini   / 2016 ஜனவரி 10 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீனவர் ஒருவர் முதலைக் கடிக்குள்ளாகியுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பந்தனாவெளி, கதிரவெளியினைச் சேர்ந்த ம.சசிதரன் (வயது 23) என்பவரே இவ்வாறு முதலைக் கடிக்குள்ளாகியுள்ளார்.

வழக்கம் போல் குறித்த மீனவர் கட்டுமுறிவில் உள்ள திருக்கணாமடு கெங்கை ஆற்றில்  மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது, முதலையானது அவரது இடது காலை  கடித்து நீருக்குள் இழுத்துச் செல்ல முற்பட்டுள்ளது.

இதன்போது மீனவரின் அபாயக் குரலைக் கேட்டு அவருடன் மீன்பிடிப்பதற்க்காக சென்ற சக மீனவர்கள் முதலையின் பிடியில் இருந்து அவரை காப்பாற்றியுள்ளனர்.

இதில் படுகாயங்களுக்குள்ளான  மீனவர், கதிரவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின் மேலதிக சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X