Niroshini / 2016 செப்டெம்பர் 16 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் கலந்துகொண்டு கலை நிகழ்வுகளை மேடையேற்ற உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டு அங்கு சென்றபோது, வாசலிலேயே வைத்து இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர் எம்மை திருப்பி அனுப்பி விட்டதாக மட்டக்களப்பு மாவட்டம் தேற்றாத்தீவைச் சேர்ந்த தேனுகா கலைக்கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இக்கழகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் எமது கலைக் கழகத்தினால் நடத்தப்படும் வில்லிசை நிகழ்வு, நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டதுடன், இது தொடர்பில் பத்திரிகையிலும் விளம்பரம் செய்யப்பட்டது.
இதற்கமைய, அனைத்து ஏற்பாட்டுடனும் உடை ஒப்பனைகளுடனும் நேற்று வியாழக்கிழமை (15) மாலை, முத்தமிழ் விழா நடைபெறும் இடத்துக்குச் சென்ற எம்மை வாசலிலேயே வைத்து “உமது நிகழ்வு இன்று இல்லை” என எமக்கு எந்தவித முன்னறிவித்தலுமின்றி எம்மை திருப்பி அனுப்பினர். இது எந்த விதமான நியாயமான செயல்?
மழை என்று காரணம் காட்டுவதென்றால், ஏனைய நிகழ்வுகளையும் ஒதுக்கியிருக்கலாம், அந்தக் குழுவினர். எனவே, எமது கலைப் பயணத்தில் இந்த அவமானம் புதிது என்பதாலும், இனிமேல் இவ்வாறானதொரு பிழை ஏற்படக்கூடாது என்பதற்காகவும் இந்தக் கண்டன அறிக்கையை வெளியிடுகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago