Suganthini Ratnam / 2016 ஜூன் 01 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தொப்பிகல பிரதேசத்தின் பல்லத்துச்சேனைக் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் உழவு இயந்திரம் ஒன்றில் முதிரைமரக் குற்றிகளை ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இரண்டு பேரை எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான், இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
குறித்த காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் வெட்டப்படுவதாக வாழைச்சேனை வட்டார வன இலாகா காரியாலய உத்தியோகஸ்தர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறித்த காட்டுப்பகுதிக்கு இராணுவத்தினரின் உதவியுடன் சென்ற வாழைச்சேனை வட்டார வன இலாகா காரியாலய உத்தியோகஸ்தர்கள், 24 முதிரை மரக் குற்றிகளை ஏற்றப்பட்ட உழவு இயந்திரத்தை கைப்பற்றியதுடன், இரண்டு பேரையும் செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.
இதனுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இரண்டு பேர் தப்பியோடியுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன இலாகா காரியாலய உத்தியோகஸ்தர்; எப்.முஹம்மட் சிபான் தெரிவித்தார்.

7 minute ago
23 minute ago
26 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
23 minute ago
26 minute ago
46 minute ago