2025 மே 09, வெள்ளிக்கிழமை

மீனவர்களின் மனப்பாங்கு மாறவேண்டும்: சுதாகரன்

Gavitha   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

மீனவர்களின் மனப்பாங்கில் மாற்றம் ஏற்படாத வரையில், அவர்களுடைய முன்னேற்றத்திலும் சட்டவிரோத மீன்பிடிச் செயற்பாடுகளிலும் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்று கிழக்கு மாகாண நன்நீர் மீன்பிடித் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.

களப்பு மீனவர் ஒன்றிணைந்த நல்லாட்சி குழு உருவாக்கம் தொடர்பான கூட்டம், மட்டக்களப்பு செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்கள், உடைந்த பீங்கான் ஓடகளைக் கூடப் பயன்படுத்துவதாக அறியமுடிகின்றது. தங்களது கடமைகளை செய்வதற்கு கடற்றொழில் திணைக்களத்துக்கு சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமையினால், தற்போது, ஒருங்கிணைந்த ரீதியிலான நிறுவனங்கள் மூலமாக மேற்கொள்ளும் நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன' என்று அவர் இதன்போது கூறினார்.

'சட்ட விரோத மீன்பிடிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்கும் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கும், பாதுகாப்பான முறைமைகளை கையாள்வதற்கும் மீனவர்களாகவே முன்வந்து சட்டங்களை கடைப்பிடித்தாலே தவிர, அதனை தடுப்பதற்கு நாம் சொல்லும் வழிமுறைகளில் எந்த பிரயோசனமும் இருக்கப்போவதில்லை' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான 'களப்பு மீனவர் ஒன்றிணைந்த நல்லாட்சிக்குழு' அம்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அமைக்கப்பட்டது.

களப்பு மீனவர் ஒன்றிணைந்த நல்லாட்சிக்குழுவின் தலைவராக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸூம் செயலாளராக கடற்றொழில் நீரியல்வளங்கள் திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ருக்சான் குருஸும் செயற்படுவர்.

பிரதேச செயலாளர், பிரதேச சபையினர், நகர அபிவிருத்தி அதிகாரசபைப் பிரதிநிதி, கடற்றொழில் நீரியல்வளங்கள் திணைக்களப் பணிப்பாளர், கரையோரம் பேணல் திணைக்களத்தின் பிரதிநிதி,; மத்திய சூழல் அதிகாரசபையின் அதிகாரி உட்பட  அனைத்துத் திணைக்களங்கள் சார்பான உத்தியோகஸ்தர்களும் களப்பு மீனவர்களின் முகாமைத்துவக் குழுக்களின் பிரதிநிதிகளும் இக்குழுவில் அடங்குகின்றனர்.  

களப்பு வளங்களைப் பாதுகாத்து வளப்படுத்தி  முகாமைத்துவம் செய்வதுடன், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைகளில் இக்களப்பு மீனவர் ஒன்றிணைந்த நல்லாட்சிக்குழு ஈடுபடும். எதிர்காலத்தில் களப்பு தொடர்பான பிரச்சினைகளை கலந்துரையாடி சட்டப்படியான தாபன முறைப்படுத்தப்பட்ட முறையிமையை ஏற்படுத்தும் வேலையிலும் இக்குழு ஈடுபடும்.

இன்றைய கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், கிழக்கு மாகாண மீன்பிடித்திணைக்களப் பணிப்பாளர் எஸ்.சுதாகரன், கடற்;றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ருக்சான் குருஸ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பார்ம் பவுண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளர் சுனில் தும்பேபொல ஆகியோரும் கலந்து கொண்டனர். அத்துடன், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், களப்பு மீனவர்களின் முகாமைத்துவக் குழுப்பிரதிநிதிகள், மீனவ அமைப்புகள், பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X