Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 15 நிமிடங்களைவரை சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் முன்னாள் ஜனாதிபதி உரையாடியுள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின்; படுகொலைச் சம்பவம் தொடர்பில் த.ம.வி.பு. கட்சித் தலைவர் சிவநேசதுரை சந்திகாந்தன் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025