Suganthini Ratnam / 2016 நவம்பர் 10 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தனது கட்சிக்காரர்களுக்கு சுமார் 400 -500 ஏக்கர் காணிகளை நீண்டகாலக் குத்தகை என்ற போர்வையில் பகிர்ந்தளித்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் குற்றஞ்சாட்டினார்.
ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் கூட்டத்தின்போதேஇ அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகத்தால் காணி நிர்வாகம் மேற்கொள்ளப்படும் மீராகேணி, மிச்நகர், ஐயங்கேணி போன்ற கிராமங்களில் சுமார் 400 தொடக்கம் 500 ஏக்கர் காணிகள், கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தன்; தலைமையில் இயங்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்களுக்கு நீண்டகாலக் குத்தகை என்ற போர்வையில் தலா 10 ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டுள்ளன' என்றார்.
'இந்தக் கிராமங்களில் சுமார் 4இ000 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அங்கு இட நெருக்கடி, நிலம் அற்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. விசேடமாக அங்கு வாழ்கின்ற மக்களுக்கான கல்வி. சுகாதாரம், பொழுதுபோக்கு, விளையாட்டு, வாழ்வாதாரம் என்பன நிலம் இன்மையால் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் உள்ளிட்ட பொதுத் தேவைகளுக்கு காணி இல்லாமலிருப்பது பாரிய பிரச்சினையாக உள்ளபோதிலும் அங்குள்ள காணிகளை முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கட்சிக்காரர்களுக்குப் பகிர்ந்தளித்துள்ளமையானது சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.
மக்கள் நிலம் அற்ற நிலையில் சன அடர்த்தியோடு வாழ்கின்றபோது ஒருவருக்கு 10 ஏக்கர் என்ற அடிப்படையில் த.ம.வி. கட்சிக்காரர்களுக்கு வழங்கியிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி காணிகளை மீட்டு பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன்களுக்காக பயன்படுத்துவதற்கு ஆவன செய்ய வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
10 minute ago
21 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
3 hours ago
3 hours ago