Suganthini Ratnam / 2017 ஜனவரி 23 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
முள்ளந்தண்டு வலி உள்ளவர்களுக்கான 'டோண்;முறை' சிகிச்சை மற்றும் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கான மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் இலவச சிகிச்சை முகாமானது மட்டக்களப்பு அரசடி மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாண விஸ்வகர்ம பொற்றொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இம்முகாமில் ஜேர்மனியைச் சேர்ந்த வைத்திய நிபுணர் ரெயின்கில்ட் இசன்ஸ்ஸி மற்றும் அவரது பயிற்றப்பட்ட 20 பேர் கொண்ட குழுவினரால் சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாக மேற்படி சம்மேளனத் தலைவர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.
ஆண்கள் 30 பேர், பெண்கள் 30 பேர் என்று மொத்தம் 60 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளதால், முற்பதிவு செய்பவர்களின் அடிப்படையில் சிகிச்சை வழங்கப்படும்.
கிழக்கிலங்கை விஸ்வகர்ம பொற்றொழிலாளர் சம்மேளன அலுவலகம் இல: 66ஃ6, பன்சல வீதி, மட்டக்களப்பு எனும் முகவரியில் முற்பதிவை மேற்கொள்ளலாம்.
குறிப்பு: ஏற்கெனவே முள்ளந்தண்டு சத்திரசிகிச்சை செய்தவர்களுக்கு இம்முகாமில் சிகிச்சை வழங்கப்பட மாட்டாது.
முள்ளந்தண்டிலுள்ள தொடர் என்புகளில் ஏற்படும் சிறிய விலகல் காரணமாக முதுகு, மூட்டு, கழுத்து, தலை, இடுப்பு, முழங்கால், இடுப்பு, நரம்பு சார்ந்து வலி ஏற்படுகின்றது.
எந்தவித பக்க விளைவுமின்றி தெரப்பி முறையிலான வலி நீக்கும் மருத்துவமே டோர்ண் சிகிச்சையாகும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
24 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
3 hours ago