2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

‘யாசகர்களையும் அனுமதிக்க வேண்டாம்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2020 மார்ச் 19 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் முன்னாயத்த நடவடிக்கையாக அதிகாரிகள் தரப்பில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எம். அல் அமீன் தெரிவித்தார்.

அதன்படி, ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் 'கொரோனா வைரஸ் ஒழிப்பு தகவல் நிலையம்' ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிலையத்துக்கு பொதுமக்கள் உச்ச பங்களிப்பை வழங்குவதனூடாக தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியுமென்றும் தெரிவித்தார்.

அத்துடன், வெளிநாடுகளிலிருந்து வருகை தந்துள்ளவர்கள் பற்றி கிராம சேவகர் அல்லது பிரதேச செயலகத்துக்குக்கு உடனடியாகத் தகவல் வழங்குதல், அவ்வாறு வருகை தந்தோர் தம்மை குறைந்தபட்சம் 14 நாள்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளல் ​வேண்டுமெனவும் அவர் வலியுத்தினார்.

யாசகர்கள், வெளியூர் தொழிலாளிகள் வீடுகளுக்குள்ளும் தொழிலகச் சூழலுக்குள்ளும் நுழைவதிலிருந்து தடுத்துக் கொள்வதுடன், அவ்வாறானவர்கள் தொடர்பில் உடனடியாக பிரதேச செயலகத்துக்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

திருமணங்களையும் விருந்தோம்பல் நிகழ்வுகளையும் தவிர்த்துக் கொள்வதுடன், அநேக தொழில்புரியும் தொழில்தளங்களை உடனடியாக மறு அறிவிப்பு வரை மூடிவிடுதல் அவசியமென்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, உணவுச்சாலைகளில், நுகர்வு பண்ட நிலையங்களில் நீண்ட நேரம் தரித்து உணவருந்துவதையும் கொள்வனவு செய்வதையும் தவிர்ப்பதுடன், உணவக, தொழில் நிலைய ஊழியர்கள் முகக்கவசத்தையும் கையுறைகளையும் அணிவதை உறுதிப்படுத்த வேண்டுமென்றும், அவர் மேலும் வலியுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .