Freelancer / 2022 ஜூலை 09 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எச்.எம்.எம்.பர்ஸான்)
வயல் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவர் யானை தாக்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - ஒட்டுவெளி எனும் வயல் பகுதியில் வைத்தே இந்த சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வேளாண்மை அறுவடை நடைபெற்றுக் கொண்டிருந்த போது வயல் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை, அப்பகுதிக்கு வந்த நான்கு யானைகளை குறித்த நபர் விரட்டிய போது அதில் ஒரு யானை தாக்கியுள்ளது.
இவ்வாறு யானையின் தாக்குதலுக்குள்ளான நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யானை தாக்குதலில் உயிரிழந்த நபர் ஓட்டமாவடி - 3 ஆம் வட்டாரம் பரிகாரியார் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 65 வயதுடைய முகம்மது முகைதீன் அகமது லெப்பை என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், மரணமடைந்த நபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
38 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
48 minute ago