2021 மே 06, வியாழக்கிழமை

யானை தாக்கி விவசாயி பலி

கனகராசா சரவணன்   / 2017 ஜூலை 18 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தில் யானை தாக்கி, விவசாயி ஒருவர், இன்று செவ்வாய்க்கிழமை (18) அதிகாலை உயிரிழந்துள்ளாரென,  வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

வாகரையைச் சேர்ந்த 56 வயதுடைய விவசாயியான கதிர்காமன் சின்னத்தம்பி என்பரே உயிரிழந்தவராவார்.

வாகரை, பட்டிமுறிப்பு வயலில் வேளாண்மை நடவடிக்கைக்காக சென்றபோதே, யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி, இவ்விவசாயி உயிரிழந்துள்ளாரென, வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம், வாகரை வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .