Suganthini Ratnam / 2016 மே 15 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்துவதற்காக 'வன விவி மித்துரு' எனும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட வன ஜீவராசிகள் சுற்றுவட்ட உத்தியோகஸ்தர் நாகராசா சுரேஸ்குமார் தெரிவித்தார்.
மேற்படி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் யானைகளின் தொல்லை காணப்படுகின்ற எட்டுப் பிரதேச செயலகப் பிரிவுகளை தெரிவுசெய்துள்ளதுடன், அவ்வப் பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து மொத்தமாக 300 இளைஞர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 50 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு கடந்த இரண்டு வாரங்களாக பயிற்சி வழங்கப்படுகின்றது.
யானைகள் கிராமத்தினுள் ஊடுருவுவதை தடுக்கும் முறை, யானைகளைக் கட்டுப்படுத்துதல், யானை வெடிகளைக் கையாளுதல் உள்ளிட்டவை தொடர்பில் இந்த இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
காட்டு யானைகளின் அட்டகாசங்கள் தொடர்பில் படுவான்கரைப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்து தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமுள்ளன.
யானைகள் ஊடுருவும் பிரதேசங்களில் பகுதி பகுதியாக 150 கிலோமீற்றர் வரை யானைப் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 100 கிலோமீற்றருக்கு யானைப் பாதுகாப்பு வேலி அமைப்பதற்குரிய திட்ட முன்மொழிவுகள் பிரதேச செயலாளர்களிடமிருந்து தமக்குக் கிடைத்துள்ளன.
மேலும், காட்டு யானைகளினால் பாதி;க்கப்பட்டவர்களுக்கு தமது திணைக்களத்தால் நிவாரணம் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago