2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யானை தாக்கியதில் இராணுவ வீரர் பலி

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானைக் காட்டுப்பகுதியில் புதன்கிழமை (19) மாலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர், காட்டு யானையின் தாக்குதலில்; உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

புணானை இராணுவ முகாமில் கடமையாற்றும் பாணந்துறையைச் சொந்த இடமாகக் கொண்ட ரஞ்ஜித் திஸாநாயக்க என்பவரே பலியாகியுள்ளார்.  

தமது வழமையான பயிற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தபோது, காட்டுக்குள் இருந்து திடீரென்று வந்த தனியன் காட்டு யானை குறித்த இராணுவ வீரரைத் தாக்கியுள்ளது.

இதில் காயமடைந்த இராணுவ வீரரை உடனடியாக வெலிக்கந்தை வைத்தியசாலையில் அனுமதித்தபோதும், சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X