Editorial / 2025 ஜூலை 08 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்,வா.கிருஷ்ணா, கனகராசா சரவணன்
மட்டக்களப்பு கருவேப்பங்கேணி பகுதியில் ரயிலில் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சுந்தரராஜா நிசாந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு கருவேப்பங்கேணி பகுதியில் சம்பவ தினம் அதிகாலை 1.30 மணியளவில் ரயில் தண்டவாளத்தில் இருந்துள்ள நிலையில் மட்டு புகையிரதத்தில் இருந்து கொழும்பு நோக்கி பிரயாணித்த கடுகதி ரயில் மோதியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago