Sudharshini / 2016 ஏப்ரல் 30 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி இன்று (30) காலை 06.10க்கு புறப்பட்டுச் சென்ற உதயதேவி புகையிரதத்தில், மாவடிவேம்பு கிராம அபிவிருத்தி சங்க வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான கணபதிபிள்ளை ரன்சிதமலர் (வயது 35) என்பவர் தேவபுரம் பகுதியில் வைத்து மோதுண்டு உயிரிழந்துள்ளார் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த அப்பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு உயிரிழந்துள்ளார்.
இது விபத்தா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
43 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
4 hours ago