Princiya Dixci / 2021 மே 05 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம், எச்.எம்.எம்.பர்ஸான்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை உடனடியாக விடுதலை செய்ய கோரி, ஓட்டமாவடி பிரதேச சபை முன்பாக கண்டனப் போராட்டம், இன்று (05) முன்னெடுக்கப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கண்டனப் போராட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, “எமது தமைமைமை விடுதலை செய்”, “ரிஷாட்டை கைது செய்த காரணத்தை வெளிப்படுத்து”, “யாரை திருப்திப்படுத்த ரிஷாட்டை கைது செய்தீர்கள்?” என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு, சமூக இடைவெளிகளைப் பேணி போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
ரிஷாத் பதியூதீன் நீதியாக விசாரிக்கப்பட்டு அவருக்கான நியாயம் வழங்கப்பட வேண்டும் என இந்த நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர் தெரிவித்தார்.
29 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
44 minute ago