Freelancer / 2023 மார்ச் 08 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
இலங்கை ரூபாய் 05 கோடி மதிப்பிலான மாணிக்கக்கல் ஒன்றை, மட்டக்களப்பு - கல்லடி பிரதேசத்தில் இருந்து கொழும்புக்கு ஓட்டோவில் இருவர் செவ்வாய்க்கிழமை (07) கடத்திச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், பொலிஸார் மற்றும் கடற்படை புலனாய்வுப் பிரிவினர் இணைந்து, மட்டக்களப்பு - குட்புறுமூலைச் சந்தியில் வைத்து குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.
மட்டு. கல்லடியில் இருந்து ஓட்டமாவடி நாவலடி சந்திவரை ஓட்டோவில் சென்று, அங்கிருந்து பஸ் மூலம் கொழும்புக்கு மாணிக்கக் கல்லை சட்டவிரோதமாக கடத்திச் செல்வதற்காக ஓட்டோவில் பயணித்த இருவரை கண்காணிப்பில் ஈடுபட்டுவந்த பொலிஸார் மடக்கிபிடித்து கைது செய்ததுடன், சுமார் 5 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக் கல்லையும் ஓட்டோவையும் மீட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கல்லடி மற்றும் திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் அஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.(N)
53 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
2 hours ago