2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

றவ்ழா ஹதீஜா அஹதியா பாடசாலை அங்குரார்ப்பண விழா

Freelancer   / 2023 ஜனவரி 17 , மு.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம் எஸ் எம் நூர்தீன்

காத்தான்குடி றவ்ழா ஹதீஜா அஹதியா பாடசாலை அங்குரார்ப்பண விழா, ஞாயிற்றுக்கிழமை (15), காத்தான்குடி ஸாவியா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது அஹதியா பாடசாலையின் தேவை மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி விளக்கி கூறப்பட்டதுடன் றவ்ழா ஹதீஜா அஹதியா பாடசாலையின் செயற்பாடு அஹதியா பாடசாலையின் கல்வித் திட்டம் என்பன பற்றியும் தெரிவிக்கப்பட்டது.

போறியியலாளர் எம்.ரஊப் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன முன்னாள் தலைவர் மௌலவி எம்.ஐ.ஆதம்லெவ்வை, மட்டக்களப்பு மாவட்ட அஹதியா சம்மேளனத்தின் தலைவர் மௌலவி எஸ்.எச்.ஸாஜஹான், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் ஏ.எல்.ஜுனைட், மௌலவி ஏ.ஜே.எம்.அமீன் பலாஹி உட்பட றவ்ழா
ஹதீஜா அஹதியா பாடசாலை ஆசிரியைகள் நிருவாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

இதன் போது றவ்ழா ஹதீஜா அஹதியா பாடசாலை மாணவர்களின் கலை கலாசாரா நிகழ்வுகளும் இடம் பெற்றன. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .