Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 23 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் எதிர் வரும் ,26 ஆம் 27ம் 28ம் திகதிகளில் கிழக்கு மாகாண மக்களை சந்திக்கவுள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, 26ம் திகதி வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர், கிண்ணியா போன்ற பிரதேசங்களிலும் 27ம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி போன்ற ஆகிய பிரதேசங்களிலும் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை, கல்முனை, சம்மாந்துறை, சாய்ந்தமருது உள்ளிட்ட முஸ்லிம் பிரதேசங்களிலும் இந்த மக்கள் சந்திப்புக்கள் நடைபெறவுள்ளன.
காத்தான்குடியில் மக்கள் சந்திப்பு 27ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு காத்தான்குடி ஹோட்டல் பீச் வே மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் காத்தான்குடிம மத்திய குழுவின் செயலாளர் எஸ்.முகம்மட் சப்ரி தெரிவித்தார்.
இதன் போது சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் தலைவர் றிசாட் பதியுதீன் எம்.பி உரையாற்றவுள்ளதாகவும் என அவர் மேலும் தெரிவித்தார்.
றிசாட் பதியுதீன் அமைச்சுப்பதவியை இராஜினாமாச் செய்ததன் பின்னர் கிழக்குக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
15 Aug 2025
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
15 Aug 2025
15 Aug 2025