Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஓகஸ்ட் 25 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
சுமார் 28 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மீராவோடை உதுமான் வித்தியாலத்துக்கான வகுப்பறைக் கட்டடம், இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் எம்.வி.முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
மேலும், அதிதிகளாக ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம்.ஜுனைட், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்குடா கிளை தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.இஸ்மாயில், மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் தலைவரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தலைவருமான கே.பி.எஸ்.ஹமீட், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் ஏ.எம்.ஜாபிர் கரீம், பிரதேச பாடசாலை அதிபர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாக சபையின் வேண்டுகோளின் பேரில், இலங்கைக்கான சவூதி தூதுவராலயத்தின் சுமார் 28 இலட்சம் ரூபாய் நிதிப் பங்களிப்பில், வகுப்பறைக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
10 minute ago
51 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
51 minute ago
58 minute ago