2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வகுப்பறை கதவை உடைத்து மாணவர்களின் பணம் கொள்ளை

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 மார்ச் 28 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட அருணோதய வித்தியாலயத்தின் வகுப்பறை கதவுகள், நேற்று அதிகாலை வேளையில் இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் சேமிப்பு உண்டியல்களில் இருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வகுப்பறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு  மாணவர்களினால்  வங்கியில் வைப்பிலிடுவதற்காக உண்டியல்களில் சேமித்து  வைக்கப்பட்டிருந்த  பணம் திருடப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபரினால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

ஆசிரியர்களும், மாணவர்களும் வகுப்பறைக்குச் சென்ற சமயத்தில் வகுப்பறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு, அலுமாரி கதவுகளும் உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிடுந்த உண்டியல்களில் இருந்த பணம் திருடப்பட்டிருந்ததாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

இப் பாடசாலையில் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையில் சுமார் 375 மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையாகும், கடந்த காலங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில்  மீண்டும் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலைக்கு பாதுகாப்பான சுற்றுமதில்கள், பாடசாலைக்கான காவலாளி இல்லாத காரணத்தினாலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக பெற்றோர் தெரிவித்தனர்

குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிசார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X