Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வா.கிருஸ்ணா / 2018 ஜூலை 03 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
“கிழக்குத் தமிழர் ஒன்றியம்”, வடக்கு மாகாணத்துக்கோ அல்லது முஸ்லிம் மக்களுக்கோ எதிரானது அல்ல எனத் தெரிவித்த கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் இணைப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கே.சிவநாதன், “கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர்களையும் அவர்களின் நிலங்களையும் பாதுகாக்கும் அமைப்பாகவே செயற்பட்டுவருகின்றது” என்றார்.
கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் வழிநடத்தல் குழுவுக்கான உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் கூட்டம், மட்டக்களப்பு - சார்ள்ஸ் மண்டபத்தில் நேற்று (02) மாலை நடைபெற்றது.
இக்கூட்டம், ஒன்றியத்தின் இணைப்பாளர்களான சிரேஷ்ட சட்டத்தரணி கே.சிவநாதன், செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் கிழக்குத் தமிழர் ஒன்றிய உறுப்பினர்கள்,சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், புத்திஜீவகள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
எதிர்காலத்தில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தை சிறந்தமுறையில் முன்கொண்டுசெல்லும் வகையில், வழிநடத்தல் குழுவுக்கான உறுப்பினர்கள் இதன்போது தெரிவுசெய்யப்பட்டனர்.
அத்துடன், அவ்வொன்றியத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டதுடன், தற்போதைய நிலையில் முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி சிவநாதன், கடந்த 70 வருடங்களில் ஆயுதப் போராட்டம், அஹிம்சைப் போராட்டம், அரசியல் போராட்டம் எனப் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ள நிலையில், இன்று கிழக்கு மாகாணத்தின் நிலை என்ன என்பதை அனைவரும் அறிவார்களெனக் கூறினார்.
இந்நிலை தொடருமானால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு இல்லாமல்போகும் ஆபத்துக் காணப்படுவதாகவும் இந்த ஆபத்தை கருத்தில்கொண்டுதான் முழு கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் வகையில் வெகுஜன அமைப்பொன்றை உருவாக்கும்போதே, அதனை எதிர்கொள்ளலாம் என்ற வகையிலேயே, கிழக்கு தமிழர் ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நிச்சயமாக எந்தவொரு காலத்திலும் அரசியற் கட்சியாக பதிவு செய்யப்படவோ நேரடியாக அரசியலிலோ தேர்தலிலோ ஈடுபடுவது கிழக்கு தமிழர் ஒன்றியத்தினுடைய நோக்கமல்லவெனத் தெரிவித்த அவர், கிழக்கு தமிழர் ஒன்றியமானது கல விடயங்களை கவனத்தில் எடுத்து செயற்படுவதாகவும் அதில் அரசியலும் ஓர் அங்கமாகும் என்றும் அரசியல் பலமில்லாது நாங்கள் எதையும் செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் தமிழர்கள் மத்தியில் சிறந்த வழிகாட்டல் குழுக்கள் இல்லாத காரணத்தாலேயே தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனரென்றும் இனிவரும் காலங்களிலும் அவ்வாறான நிலையொன்று ஏற்படக்கூடாது என்பதற்காகவே கிழக்கு தமிழர் ஒன்றியத்தால் வழிகாட்டல் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி மேலும் குறிப்பிட்டார்.
48 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
2 hours ago