Editorial / 2018 ஏப்ரல் 29 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பு மாவட்டத்தில், யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து மக்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுமென, வன ஜீவராசிகள் மற்றும் வலு ஆதார அமைச்சர் ரவீந்திரசமரவீர தெரிவித்தார்.
வன ஜீவராசிகளால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில், நேற்று (28) நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, பிரதேசங்களில், தொல்லை தந்துகொண்டிருக்கும் குரங்குகளை, நகர பிரதேசங்களிலிருந்து வனப்பகுதிகளுக்கு உடனடியாக விரட்ட ஆவண செய்யுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ரவீந்திர சமரவீர, உடனடியாகக் குரங்குகளை நகரப்புறங்களில் இருந்து விரட்டி, அவற்றை வனப்பகுதிகளில் சேர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு, பிரதேச வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், வாகரை, தாந்தாமலை, பெரியபுல்லுமலை ஆகிய பகுதிகளிலும் காடும் சார்ந்த இடங்களிலும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் உப அலுவலங்கள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் வாக்குறுதியளித்தார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் மீள்குடியேறிய பிரதேசங்களில், 2012ஆம் ஆண்டுக்கு முன்னதாக ஏற்கெனவே அமைக்கப்பட்ட மின்சார வேலியை அகற்றி, அவற்றை வனப் பகுதிகளுக்கும் மக்கள் வாழும் கிராம எல்லைகளுக்கும் இடையில் அமைக்குமாறும் அவர் சம்பந்தப்பட்டோருக்குப் பணிப்புரை விடுத்தார்.
அத்துடன், வனஜீவராசிகள் தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எமது அமைச்சும் திணைக்களமும் முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025