Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
ரீ.எல்.ஜவ்பர்கான் / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 15 வர்த்தகர்கள் மீது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனவென, அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, ஏறாவூர், காத்தான்குடி, ஆரையம்பதி, ஓட்டமாவடி, வாழைச்சேனைஉட்பட பல பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள பேக்கிரிகள், வாரச்சந்தைகள், நகை விற்பனை நிலையங்கள், பல சரக்குக்கடைகள் உட்பட சுமார் 150 வர்த்தக நிலையங்கள், நேற்றும் (02) இன்றும் (03) இவ்வாறு திடீர் சுற்றிவளைப்புக்கு உட்படுத்தப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் பேரில், இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
முத்திரையிடப்படாத தராசுகள், அளத்தல் கருவிகள், படிக்கற்களைப் பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், நிறை குறைந்த பாண், நுகர்வுக்கு உதவாத பொருள்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றங்களில், மேற்படி வழக்குத் தாக்கல்கள் செய்யப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
8 hours ago
8 hours ago