2025 மே 08, வியாழக்கிழமை

வறிய மாணவர்களுக்கு பாதணிகளும் புலமைப் பரிசில் உதவி தொகையும்

Niroshini   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் பிரதேசத்தில் வறியகோட்டுக்குட்பட்ட  700 மாணவர்களுக்கு  சுமார் ஏழு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பெறுமதியான பாதணிகளும் 40 மாணவர்களுக்கு ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பெறுமதியான புலமைப் பரிசில் உதவி தொகையும் வழங்கப்பட்டதாக  ஏறாவூர் கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் நிருவாக அதிகாரி எம்.எச்.எம். சனூஸ் தெரிவித்தார்.

இந்நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை  ஏறாவூர் கல்வி அபிவிருத்தி நிறுவன அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதில்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலய கல்விப் பணிப்பாளர் எம்.ஐ. சேகு அலி, ஏறாவூர் கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் ஆலோசனைச் சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். நஸீர், அதன் நிருவாக அதிகாரிகளான கே.எம். பதுறுஸ்ஸமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X