Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Kogilavani / 2015 நவம்பர் 27 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுதாகரன்
மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் வறுமைக் கோட்டில் வாழும் வறிய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் அதிபர் ஜெ.ஆர்.பி.விமலராஜ் தலைமையில் கடந்த வியாழக்கிழமை வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட லயன்ஸ் கழகத்தின் உபதலைவர் கே.ரவீந்திரன் மற்றும் மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பிரதி அதிபர் கே.பாஸ்கர் ஓய்வுநிலை ஆசரிpயை திருமதி அரசம்மா தியாகநாதன் உட்பட ஆசிரியரர்கள்,மாணவர்;கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது அவுஸ்திரேலியாவை வதிவிடமாகக் கொண்ட கே.சுதர்சனின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சுமார் நூற்றி எழுபத்தைந்து மாணவர்களுக்கு தலா ஆயிரத்து ஐந்நூறு ரூபா பெறுமதியான பாதணிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
3 hours ago