Editorial / 2020 ஜூன் 22 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வீதியில் ஏற்படுகின்ற வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒற்றை வழிப்பாதை ஒழுங்கை இறுக்கமான முறையில் நடைமுறைப்படுத்துமாறு, மட்டக்களப்பு போக்குவரத்துப் போலிஸாருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
போதனா வைத்தியசாலை, அதனை அண்டிய பகுதிகளில் நிலவும் போக்குவரத்து பிரச்சனைகள தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல், மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நேற்று (21) நடைபெற்றது.
மேற்படிக் கலந்துரையாடலில் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்ட வைத்தியசாலை வீதிக்கான ஒற்றை வழிச் செயற்பாடு முறையாக செயற்படுத்தப்படாத நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்ட போது, அங்கு சமூகமாயிருந்த வீதிப் போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி, சில விடயங்கள் காரணமாக இந்தச் செயற்பாட்டை தொடர்ச்சியாக கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் இரு வாரங்களின் பின்னர் இந்த செயற்பாட்டை இறுக்கமான முறையில் செயற்படுத்த தமது பிரிவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், வைத்தியசாலை வீதியை அகலப்படுத்தி, வாகன நிறுத்தங்களுக்கான இடங்களை அடையாளப்படுத்தும் வரை ஒற்றை வழிச் செயற்பாட்டை நடைமுறைப்படுத்தல், அதேபோன்று எவராவது அழைக்கும் பட்சத்தில் வைத்தியசாலை வாயிலுக்குச் சென்று அவர்களை ஏற்றிச் செல்வதற்கும் அனுமதிப்பது எனவும், இவ்வீதியில் இச்செயற்பாட்டில் ஈடுபடுகின்ற வாகனங்களிடமிருந்து எதுவித தரிப்புக் கட்டண அறவீட்டையும் மேற்கொள்வதில்லை எனவும், இது பற்றி குத்தகைக்காரருக்கு எழுத்து மூலம் அறிவிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025