2026 பெப்ரவரி 05, வியாழக்கிழமை

வாழைச்சேனை மீனவர் சடலமாக மீட்பு

Editorial   / 2022 ஜனவரி 31 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர், இன்று (31) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து நேற்று (30) மீன்பிடிக்கச் சென்ற காவத்தமுனை பகுதியை சேர்ந்த 74 வயதுடைய அச்சி முகம்மது ஆதம் பாவா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆழ்கடலில் வைத்து மீனவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதில் மீனவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X