2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்கு உதவ முன் வருகை

Editorial   / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், வ.சக்தி  

கொவிட் 19 கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, அரசாங்கம் அமுல்படுத்திவரும் ஊரடங்குச்சட்டத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள  மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளாந்த கூலி வேலைத் தொழிலாளருக்கு உலருணவுகளை அன்பளிப்புச் செய்ய, தொடர்ந்தும் பல தன்னார்வ  தொண்டர் அமைப்புக்களும் பொதுநல சங்கங்களும் முன்வந்துள்ளன.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின் வேண்டுகோளுக்கு அமைவாக,  லண்டனில் செயல்படும் நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கத்தின் மட்டக்களப்பு கிளை, சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருள்களை அன்பளிப்பு செய்துள்ளது.

சுமார்  300 கும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கக் கூடிய வகையில், அரிசி, சீனி, மா, பருப்பு அடங்கலான உலருணவுகள், அவற்றில் அடங்கியிருந்தன என்று மாவட்ட செயலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இப்பொருள்களை நலிவுற்றோர் அபிவிருத்திச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை பிரதிநிதிகள்,  மாவட்டச் செயலகத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதியிடம் நேற்று (7) ஒப்படைத்தனர்.

இந்த உலருணவுப் பொதிகள், மண்முனை பற்று, ஆரையம்பதி, கோறளைப்பற்று தெற்கு, கிரான் ஆகிய  பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நாளாந்த கூலிவேலை தொழிலாளருக்கு வழங்குமாறு, இரு பிரிவின் பிரதேச செயலாளர்களுக்கும் அரசாங்க அதிபர் பணி;த்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X