2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

வாவியில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு

Freelancer   / 2023 பெப்ரவரி 17 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம் 

மட்டக்களப்பு வாவியில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லேடி மெனிங் வீதிக்கு அருகாமையில் உள்ள வாவியில் நேற்று (16)  மாலை குறித்த இளைஞன் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சடலமாக மீட்கப்பட்டவர் திருக்கோயில் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ரீ.சுதர்சன் என்ற இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த மூன்று தினங்களாக காணாமல் போயிருந்த நிலையில்,  இவரது சடலம் நேற்று மட்டக்களப்பு வாவியில்  மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X