Freelancer / 2025 ஜனவரி 18 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு நகர் வாவியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் சடலம் இன்று (18) காலை 10.00 மணிக்கு மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்லடி பாலத்துக்கு அருகாமையிலுள்ள முனிச் விக்டோரியா நட்புறவு வீதியிலுள்ள வாவிக்கரையில், நீரில் மூழ்கிய நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் இருப்பதை கண்டு, பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கினர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன், சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.AN
41 minute ago
50 minute ago
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
50 minute ago
54 minute ago
2 hours ago