2025 மே 09, வெள்ளிக்கிழமை

விகாரை வளாகத்தில் இந்துக் கோவில் கும்பாபிசேகம்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இனங்களுக்கிடையில் மத இன நல்லிணகத்தை ஏற்படுத்தும் வகையில், மட்டக்களப்பு, ஜெயந்திபுரம் பௌத்த விகாரை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீ கண் திருஷ்டி கணபதி கோவிலின் பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம், நேற்று (07) நடைபெற்றது.

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பௌத்த விகாரை விகாராதிபதி பட்ட பொல ஸ்ரீ குனானந்த நாயக்க தேரரின் ஆலோசனைக்கு அமைய,  ஜெயந்திபுரம் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் இக் கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கள்ளியங்காடு ஸ்ரீ ஆஞ்சநேய கோவில் பிரதமகுரு சிவஞான திலகம் சிவஸ்ரீ உத்தம ஜெகதீஸ்வரக் குருக்கள் தலைமையில் கிரியைகள் ஆரம்பமாகி,  யாகங்கள் நடைபெற்றதுடன், ஸ்ரீ கண் திருஷ்டி கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டு, எண்ணெய்க் காப்புச் சாத்தும் நிகழ்வும் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X