2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

விசேட சுற்றிவளைப்பு; இரு நாட்களில் 25 பேர் கைது

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் பல்வேறு இடங்களில் கடந்த இரு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 25 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர்களிடமிருந்து 25 வகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

உழவு இயந்திரங்கள் – 16, டிப்பர் – 07, லொறி - 02 ஆகியனவே கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த குற்றச்சாட்டிலேயே மேற்படி 25 நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாகனேரி, பொத்தானை, புலிபாய்ந்தகல், ஒமடியாமடு, ஊத்துச்சேனை, வெள்ளாமைச்சேனை மற்றும் புணாணை ஆகிய பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வருவதாக வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே, இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வாழைச்சேனை பொலிஸார் மற்றும் வாழைச்சேனை அதிரடிப்படையினருடன் இணைந்து இரு நாட்கள் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் மரக் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் விசேட பொலிஸ் குழு செயற்பட்டு வருவதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X