2025 மே 02, வெள்ளிக்கிழமை

விசேட தேவையுடையோர் பாடசாலை மீண்டும் ஆரம்பம்

Princiya Dixci   / 2021 மார்ச் 24 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை விசேட தேவையுடையோர் பாடசாலை கற்றல் செயற்பாடுகளுக்காக இன்று (24) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மிக நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த இப்பாடசாலை, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் தலைவரும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரிய ஆலோசகருமான எம்.பீ.எம்.சித்தீக் தெரிவித்தார்.

பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களின் நலன் கருதி, சுகாதார முறைகள் பேணப்பட்டு, மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் நடைபெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X