Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஒக்டோபர் 22 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ்
மோட்டார் போக்குவரத்து திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட நடமாடும் சேவை (21) ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் நடைபெற்றது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டனர்
அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்கான உரிமை மாற்றம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கான உரிமை மாற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
உரிமை மாற்றத்திற்காக விண்ணப்பித்து இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கான தீர்வு காணல், பதிவுச் சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்ளல், வாகனங்களை பரிசீலித்து நிறைச்சான்றிதழ் மற்றும் அடையாளச் சான்றிதழ் வழங்குதல், சகல வாகனங்களுக்கான உரிமை மாற்றல் விண்ணப்பங்களை பொறுப்பேற்றல் போன்ற சேவைகளும் நடைபெற்றன.
எழுத, வாசிக்க தெரியாத தேர்ச்சி குறைந்த நபர்களுக்காக வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்கு விசேட பரீட்சை நடாத்தப்பட்டதுடன், நீண்டகாலமாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள முடியாத, ஆவணங்களில் குறைபாடுகளுடன்கூடிய வாகனங்களுக்காக மீண்டும் வருமான அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக்கொள்வதற்கு சிபாரிசுக் கடிதங்கள் வழங்குதல், சிலிண்டர் கொள்ளளவு 50ற்கும் குறைந்த மோட்டார் சைக்கிள்களை (மோபேட்) பதிவு செய்தல், சாரதி அனுமதிப்பத்திரங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளல். விசேட தேவையுடைய நபர்களுக்காக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்குத் தேவையான வைத்திய தொழினுட்பக் குழுவின் சிபாரிசுகளை வழங்குதல், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளின் தெளிவற்ற செஸி மற்றும் எஞ்சின் இலக்கங்களை தேசிய ரீதியாக அச்சிடல், பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்தல் போன்ற சேவைகளும் இதன்போது வழங்கப்பட்டன.
42 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
4 hours ago
4 hours ago