2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் மரணம்

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 21 , பி.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கீச்சான்பள்ளம் ஒள்ளிக்குளம் வீதியில் கடந்த இருபது நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேயனோடை ஈரான் சிற்றி பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய ஏ.பி.அஹமட் அலி என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கடந்த இருபது நாட்களுக்கு முன்னர் கீச்சான்பள்ளம் ஒள்ளிக்குளம் வீதியில்  மோட்டார் சைக்கிளில் செல்லும் போது விழுந்ததில் இந்த  விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர், மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை (19) உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு,  அன்றிரவே  நல்லடக்கம் செய்யப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X