Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2020 மே 10 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
கடந்த இருவாரங்களுக்குள் 2,27,675 மில்லி லீற்றர் கசிப்பு, 2.27,000 மில்லி லீற்றர் கோடோ, மற்றும் 45,240 மில்லி லீற்றர் சட்டரீதியற்ற முறையில் விற்பனைக்குத்
தயாராக இருந்த மதுபானம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஜி.யு.ஐ. குணவர்த்தன ஞாயிற்றுக்கிழமை (10) தெரிவித்தார்.
தற்போது பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில் பல இடங்களிலும்,
கசிப்பு, கோடா, மற்றும், சட்ட ரீதியற்ற முறை யிலான மது விற்பனை என்பன இடம்பெற்றுக் கொண்டு வருகின்றன.
இவற்றைக் கட்டுப் படுத்தும் முகமாக களுவாஞ்சிகுடி பொலிசார் தீவிர செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளனர்.
அந்த வகையில் களுவாஞ்சிகுடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.டி.எம்.பாறுகின் ஆலோசனையின் பெயரில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப்
பொறுப்பதிகாரி குணவர்த்த னவின் தலைமையிலான குழுவினர் மேற்கொ ண்ட நடவடிக்கையின்போதே இந்த சட்டரீதியற்ற மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவினுள் 75 இடங்களில் கைப்பற்றப் பட்டுள்ளதாகவும், இதில் 75 சந்தேக நபர்களும், கைது செய்யப் பட்டுள்ளதாகவும்,
அவர்களை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி எம்.ஜி.யு.ஐ.குணவர்த்தன மேலும் தெரிவித்தார்.
42 minute ago
47 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
47 minute ago
53 minute ago