2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

விற்பனை நிலையத்தில் தீ

வா.கிருஸ்ணா   / 2018 ஜூலை 08 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, செங்கலடி - பதுளை வீதியில் உள்ள பலசரக்கு விற்பனை நிலையமொன்றில் இன்று (08) நண்பகல் ஏற்பட்ட திடீர் தீ, பிரதேசத்தில் இருந்தவர்களால் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்போது பெருமளவான பொருட்கள் தீயில் கருகியுள்ளனவெனவும், இது தொடர்பில் ஏறாவூர்ப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதெனவும், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

மூடியிருந்த கடையிலேயே, இந்தத் தீச்சம்பவம் இடம்பெற்றுள்ளதெனவும், குறித்த சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்துத் தெரியவரவில்லையெனவும், சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X