Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயங்கேணிக் கிராம வீட்டு வாசலில் துருப்பிடித்த பெரிய மோட்டார் குண்டொன்று, ஞாயிற்றுக்கிழமை மாலை (15) கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டுரிமையாளர், தனது வீட்டு முற்றத்துக்குப் பரப்புவதற்காக ஒரு லோட் மண் வாங்கியுள்ளார். டிப்பர் மூலம் கொண்டுவரப்பட்டுக் கொட்டப்பட்ட மண்ணை, வாசலில் பரப்பிக் கொண்டிருந்தபோது, கடினமானதொரு இரும்பு போன்ற பொருள் மண்ணுக்குள் மறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
அதனை மண்வெட்டியால் ஓரிரு தடவைகள் புரட்டி, தட்டிப் பார்த்தபோது அது வெடி குண்டாக இருக்கலாம் என அறியமுடிந்துள்ளது.
இதுபற்றி ஏறாவூர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், பாதுகாப்பை மேற்கொண்டு குண்டை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
15 minute ago
2 hours ago